ஓரினச்சேர்க்கை குறித்து அறிந்து கொள்ளவே இந்தியர்கள் விரும்புவதில்லை: பிரபல நடிகை

ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவுமே இந்தியர்கள் முன்வருவதில்லை என்று பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாகி வரும் நிலையில் இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்றும், இந்தியா மதக்கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதால் இதனை அவர்களால் ஏற்க முடிவதில்லை என்றும் பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ’சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்’ என்ற குறும்படத்தில் நடித்தார். ஓரினச்சேர்க்கை குறித்த கதையம்சம் குறித்த இந்த படத்தை ராம்கமல் முகர்ஜி என்பவர் இயக்கியுள்ளார். மறைந்த ஈயக்குனர் ரிதுபர்னோ கோஷ் என்பவருக்கு அஞ்சலி செலுத்து வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் குறித்து நடிகை செலினா கூறும்போதுதான் இந்தியர்களில் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதால் ஓரினச்சேர்க்கையை குறித்த புரிதல் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் குறும்படம் விரைவில் ஓட்டி பிளாட்பாரத்தில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share via
Copy link
Powered by Social Snap