சூர்யாவின் ‘அருவா’ நாயகி குறித்த தகவல்!

நடிகர் சூர்யா தற்போது ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் விரைவில் அவர் ஹரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது

சூர்யா-ஹரி மீண்டும் இணையும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒருசில நடிகைகள் ஏற்கனவே பரிசீலனையில் இருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் ரசிகர்களிடம் உரையாடிய நடிகை ராஷிகண்ணா, சூர்யா-ஹரி படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதை அறிவித்துள்ளார். ராஷிகண்ணா வெளியிட்ட இந்த தகவலை அடுத்து இதனை சூர்யாவின் ரசிகர்கள் ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

மேலும் அருவா’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் சகோதரர்களாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இன்னொரு ஹீரோயின் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருந்தாலும் சிங்கம் சீரிஸ் போல் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்காது என்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா விவகாரம் முடிந்தபின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி படத்தில் நடித்து முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap