
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே வெளிவருவதாக இருந்து, பின் கொரொனாவால் படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது.
இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்றால் காதலுக்கு மரியாதையும் ஒன்று.
இப்படம் ரூ 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் ரூ 15 கோடி வரை வசூல் செய்து அப்போது சாதனை படைத்தது.
மேலும், இப்படம் சுமார் 200 நாட்கள் வரை ஓடியதாம்.