பசுவோட மைன்ட் வாய்ஸ் எல்லாம் கேட்க ஆரம்பிச்சிடுச்சே.! – பிரபல ஆங்கரின் நிலை இதுதான்.

ஆங்கர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக கலக்கி வருபவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் ஆங்கராக அசத்திய இவரின் கலகலப்பான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார்.

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். கிராமத்தில் பசுவுடன் அமர்ந்தபடி எடுத்துள்ள போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ”மைன்ட் வாய்ஸ் உரையாடல்.. பசு : கெஸ்ட்டுன்னு வந்துட்டு எவ்வளவு நாள் இங்க இருக்கா பாரு,, நான் : நீ எவ்ளோ முறைச்சாலும் 15 நாள் நான் இங்க தான் இருப்பேன், உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த நகைச்சுவையான பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap