
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக கணவருடன் தனிமையில் இருக்கும் தீபிகா, சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவில் தீபிகா கூறியிருப்பதாவது:
‘நான் சந்தித்த அனைவரையும் விட நீங்கள் மிகவும் சிறந்தவர். இதுவரை நான் சந்தித்தவர்களில் நீங்கள் தான் பெஸ்ட்’ என்று கூறியுள்ளார். தீபிகாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த பதிவில் அவர் மாங்காய் துண்டுகளும், அதன்மீது மிளகாய்ப்பொடி தூவியிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொதுவாக கர்ப்பமான பெண்கள் மாங்காய்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்ற வகையில் தீபிகாவும் கர்ப்பமாக இருக்கின்றாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு தற்போது தீபிகா எந்தவித பதிலையும் கூறவில்லை என்றாலும் விரைவில் அவரிடம் இருந்து கர்ப்பம் குறித்த விளக்கம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது