லண்டனில் சிக்கியிருந்த 207 பேர் நாட்டை வந்தடைந்தனர்!

லண்டனில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர், இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், இன்று (04) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

குறித்த மாணவர்களின் பயணப்பொதிகள் கிறுமி தொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லபட்டுள்ளனர்.

அத்துடன், லண்டனில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மாணவர்களை அழைத்துவர மற்றுமொரு விமானம் லன்டன் நோக்கி இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap