அடுத்தவனை கேலி பண்ணா பத்தாது: கொஞ்சம் பொறுப்பா இருங்க: நடிகர் சாந்தனு

அடுத்தவர்களை கேலியும் கிண்டலும் செய்தால் மட்டும் பத்தாது, கொஞ்சம் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 தாண்டியுள்ள நிலையில் இதுகுறித்து அதிர்ச்சியுடன் நடிகர் சாந்தனு ஒரு பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் பெரும்பாலும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி ஆகும். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்தால் மட்டும் பத்தாது. நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் இருந்து, இந்த நோயை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சாந்தனு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பதை அடுத்தே சாந்தனுவிடம் இருந்து இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap