அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை

மும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில், டுவிட்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். அஜித் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, சிறந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap