டீக்கடைக்காரர் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்த அஜித்!

தல’ என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் அஜித், மனிதநேயம் மிக்கவர் என்றும், எதிரே இருப்பவர்களின் பார்வையில் இருந்தே அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு, அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பவர் என்றும் பல உதாரண நிகழ்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அவற்றில் ஒன்றாக ஏழை டீக்கடைக்காரரின் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்த அஜித்தின் நிகழ்வு ஒன்று தற்போது வெளிவந்துள்ளது

சமீபத்தில் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்த சுஹெயில் சந்தோக் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து அவர் ஒரு ஏழை குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

அஜித்துடன் தான் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டதாகவும், அப்போது அந்த டீக்கடைக்காரும் அவருடைய குடும்பத்தினர்களும் அஜித்துடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் அதனை அஜித்திடம் கேட்க தயங்கி கொண்டிருந்ததாகவும் சுஹெயில் சந்தோக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென அந்த டீக்கடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர்கள் கேட்காமலேயே அவர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து கொண்டார் என்றும், இதனால் அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை தற்போது அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap