விவாகரத்துக்கு பின் பிரபல நடிகரை திருமணம் செய்யும் சீரியல் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’அவளும் நானும்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர் ஏற்கனவே ’தெய்வம் தந்த வீடு’ ’பொன்மகள் வந்தாள்’ ஆகிய சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த டான் டேனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மேக்னா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் மீண்டும் சீரியல்களில் மேக்னா நடிக்கத் தொடங்கியதால்தான் இந்த கருத்து வேறுபாடு என்று கூறப்படுகிறது இதனையடுத்து இருவரும் ஒரு வருடம் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டான் டோனி ஏற்கனவே மறுமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேக்னாவும் மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்த நடிகர் விக்கி மற்றும் மேக்னா இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த காதலால் தான் மேக்னாவுக்கு அவருடைய முன்னாள் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் வதந்திகள் வருகின்றன. இதனால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share via
Copy link
Powered by Social Snap