வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மற்றுமொரு குழு!

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த மற்றுமொரு குழுவினர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் மிரிஹான காவல்துறை பிரிவு மற்றும் நுகேகொடை பிரிவிலுள்ளவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்துகளில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap