
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்த புரூனோ என்ற செல்ல நாய் மரணம் அடைந்தது குறித்து இரங்கல் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
11 ஆண்டுகளாக எங்களுடன் வாழ்ந்துள்ளாய், ஆனால் எங்களது வாழ்நாள் முழுதுவமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளாய். இன்று இன்னும் சிறந்த இடத்திற்கு சென்றுவிட்டாய். கடவுள் உன் ஆத்மாவை சாந்தி அடையச் செய்யட்டும்’ என விராத் கோஹ்லி தனது இரங்கல் ஸ்டேட்டஸில் தெரிவித்துள்ளார்.
விராத் கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் தனது சமூக வலைத்தளத்தில், ‘செல்ல நாய் புரூனோவின் புகைப்படத்தை பதிவு செய்து ஆர்.ஐ.பி என்று குறிப்பிட்டுள்ளார்.
விராத் மற்றும் அனுஷ்கா செல்லமாக வளர்த்து வந்த நாய் திடீரென உடல்நலக்கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளது இருவரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.