ஊரடங்கு போட்டவுடன் முழுசா விவசாயத்துல இறங்கிட்டாங்களே.!! – அசத்தும் இளம் நடிகை.

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது தமிழில் பிசியான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார். தும்பா படத்தில் கனா தர்ஷன் மற்றும் தீனாவுடன் நடித்து அசத்திய இவர், தற்போது மலையாளத்தில் ஹிட் அடித்த ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஊரடங்கு போட்டதால், திருநெல்வேலியில் குடும்பத்துடன் இருக்கும் கீர்த்தி பாண்டியன், விவசாயத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

முன்னர் ட்ராக்டரில் நிலத்தை உழும் வீடியோவை அவர் பதிவிட்டார். தற்போது வயலில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ” என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap