”ஓ மை கடவுளே !!” – விஜய் சேதுபதியின் கமெண்ட் – செம வைரல்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மாநிலத் தலைநகர் சென்னை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய மாநில அரசுகளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து வருகின்றனர். மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ”பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!!” என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap