ட்விட்டரில் இணைந்துள்ளாரா நடிகர் செந்தில் ? – விவரம் இதோ

பல தலைமுறைகளாக தனது காமெடிகள் மூலம் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் செந்தில். தற்போது காமெடி சேனல்களில் ஒளிபரப்பாகும் காமெடிகளில் பெரும்பாலனவை நடிகர் செந்திலுடையது.

நடிகர் செந்தில் தனது இன்னசென்டான செயல்பாடுகளால் எதாவது தப்பு பண்ணி கவுண்டமணியிடம் மாட்டிக்கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார். உனக்கு யாருடா எப்படி யோசிக்க சொல்லிக்கொடுக்கிறது என கவுண்டமணி போல் நமக்கும் கேள்வி எழும்.

பெட்ரோமாஸ் லைட் காமெடி, வாழைப்பழ காமெடி என வாழ்நாளுக்கும் நமக்கு அளித்திருக்கும் கொடை எண்ணிலடங்காதவை. இந்நிலையில் நடிகர் செந்தில் ட்விட்டரில் இணைந்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த டிவிட்டர் அக்கவுண்ட் போலியானவை என தெரியவந்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap