அஜித் அன்று தான் படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுதார், உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த படம், இப்படம் வெளிவந்து 20 வருடம் ஆகியுள்ளது.

இதற்காக ராஜிவ் மேனன் பேசும் போது, சந்தனே தென்றலே பாடல் எடுக்கும் போது அஜித் கண்கள் கலங்கியே இருந்தது.

அப்போது ஏன் அஜித் என்று கேட்ட போது, சார் முதுகு ரொம்ப வலிக்குது என்று சொல்லிவிட்டு, வாங்க சார் இந்த ட்ரெயின் போகும் போதே இந்த காட்சியை எடுத்துவிடலாம் என கூறினாராம்.

Share via
Copy link
Powered by Social Snap