”இதுக்காக என்னை மிரட்டுனாங்க..” – நடிகர் மாதவனின் Untold Stories.

நடிகர் மாதவன் தனது கல்லூரி நாட்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மாதவன். இவர் நடித்த மின்னலே, அலைபாயுதே உள்ளிட்ட படங்கள் க்ளாசிக்காக கொண்டாடப்படுகின்றன. மேலும் இவர் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மாதவன் நமக்காக வீடியோ கால் மூலம் உரையாடினார். அப்போது அவர் தனது கல்லூரி நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ”எனக்கு காலேஜ்ல நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை.

எனக்கு இருந்த ஃப்ரெண்ட்ஸ்ல நிறைய பேர் பொண்ணுங்களா இருந்தாங்க. அப்படிதான் சொல்லனும். எப்பவுமே என்னை சுத்தி பெண்கள் இருக்கிறதுனால, சீனியர்ஸ் என்னை மிரட்டி இருக்காங்க. காலேஜ் ரவுடியிசம், சண்டையிலயும் என் பங்கு இருந்துருக்கு” என தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap