உதவிய விஷ்ணு விஷால்

வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றார்கள் தினக்கூலி பணியாளர்கள். பல பிபலங்கள் தங்களினால் முடிந்த உதவியை செய்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்து எஃப்.ஐ.ஆர், மோகன்தாஸ் மற்றும் தலைப்பிடாத வெறொரு படத்தில் நடித்து வந்தார்.

இந்த படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்ட பணிகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த மூன்று படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் சம்பளத்தை வழங்கி உதவியுள்ளார் விஷ்ணு விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap