
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் வேட்டையனாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கவின் ‘நட்புனா என்னனு தெரியுமா ?’ படத்தின் மூலம் ஹீரோவானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது இயல்பான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இதனையடுத்து அவர் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிகில்’ புகழ் அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அம்ரிதா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”என் படத்துக்கு நானே காஷ்டியூம் டிசைனரான தருணம். காரணம் படம் முழுக்க ஒரே காஷ்டியூம் தான். இது ‘லிஃப்ட்’ படத்துக்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.