‘துப்பாக்கி 2’ வா ? விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘தளபதி 65’ குறித்து முக்கிய தகவல்!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அது முடிந்து மாஸ்டரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயின் அடுத்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் விஜயுடன் முதல் முறையாக இணைய உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படம் ’துப்பாக்கி 2’வா என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி விஜய்-முருகதாஸ் இணையும் புதிய திரைப்படம் துப்பாக்கி 2 அல்ல, ஒரு புதிய ஸ்க்ரிப்ட் என்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap