பிரபல பிக்பாஸ் போட்டியாளர் அவசரகதியில் மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் சோகம்

கடந்த 2008 ஆம் ஆண்டு ஹிந்தி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சம்பவனா சேத். இவர் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அவர் தற்போது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்ததுள்ளார். இந்நிலையில் அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இரவு ( மே 5 ) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவரது கணவர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். இன்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்தம் குறைந்தது காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap