மிக எளிமையாக நடந்த நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டு விசேஷம்… போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத் (Ved) பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். சௌந்தர்யா 2019-ஆம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். குழந்தை அஸ்வின் அவரது முன்னால் கணவர் அஷ்வின் அவர்களின் மகன் ஆவார்.

இந்த பிறந்தநாள் போட்டோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. விஷாகன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டிருக்க, சௌந்தர்யா இவ்வாறு தலைப்பிட்டுள்ளார் “1..2..3…4… எங்கள் மகனுக்கு 5 வயது ஆகிவிட்டது. உன்னை நாங்கள் தினமும் கொடாடுகிறோம். எங்கள் சிறிய ஏஞ்சலை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேத்” என்று கூறியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap