உலகின் வல்லரசு நாடுகளில் அதன் பாதிப்பு என்பது மிக அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அமெரிக்க அரசாங்கமே செய்வதறியாது திகைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் முக கவசமும், சமூக இடைவெளியும் அனைவராலும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் இன்று ட்ரம்ப் அரிசோனா மாகாணத்தில் மாஸ்க் தயாரிக்கும் இடத்தை பார்வையிட சென்றபோது விதிமுறைகளுக்கு உட்பட்டு மாஸ்க் அணிய அதிகாரிகள் கூறியும் அவர் மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரே இப்படி விதிமுறையை மீறினால் மக்கள் எப்படி விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்று அனைவரும் ட்ரம்பை விமர்சனம் செய்து வருகிறார்கள்