13 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் சிவாஜி படத்திலிருந்து நீக்கப்பட்ட அந்நியன் ரெஃபரென்ஸ் Video இதோ!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. ரஜினி, ஷ்ரியா, விவேக், மணிவண்ணன் என்று நட்சத்திர மட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த திரைப்படத்துக்கு பிறகு ஷங்கர் பல வெற்றிப்படங்களை எடுத்திருந்தாலும் சிவாஜி இன்னும் சிறந்த எண்டர்டெயினராக தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக அந்த படத்துக்காக எழுத்தாளர் சுஜாதா எழுதிய பஞ்ச் வசனங்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறது.

இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காமெடி காட்சியை பகிர்ந்துள்ளார். அந்நியன் படத்தில் வரும் ஒரு ஹைலைட்டான காட்சியை ரிக்ரியேட் செய்வது போல உள்ள அந்த காட்சியில் விவேக் அந்நியனாகவும், அம்பியாகவும் மாறி மாறி நடித்திருக்கிறார். டிவிட்டரை விட்டு குறுகிய காலம் விலகுவதாக சொன்ன விவேக் தற்போது மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளார்

Share via
Copy link
Powered by Social Snap