எங்கோ பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி: மாயவன் பற்றி இயக்குநர் சி.வி. குமார்.

திரையரங்கில் வெளியானபோது கிடைத்த வரவேற்பை விடவும் ஓடிடி தளத்தில் வெளியான மாயவன் படம் அதிகப் பாராட்டைப் பெற்று வருகிறது.

தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரித்து இயக்கி 2017-ல் வெளியானது மாயவன் படம். சுந்தீப் கிஷன், லாவண்யா திரிபதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி போன்றோர் நடித்தார்கள். இசை – ஜிப்ரான்.இந்நிலையில் யூடியூப் தளத்தில் மாயவன் படத்தின் ஹிந்திப் பதிப்பு வெளியானது. ஏராளமானோர் இந்தப் படத்தைப் பார்த்துள்ளது குறித்து தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியதாவது:யூடியூபில் மாயவன் படத்தின் ஹிந்திப் பதிப்புக்கு இரண்டரை கோடிப் பார்வைகள் கிடைத்துள்ளன.

ஏராளமான நேர்மறையான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. யூடியூப் தளத்தில் பெரிய ஹிட். கரோனா ஊரடங்குக் காலத்தில் பலரும் படத்தை அமேசானில் பார்த்துவிட்டு என்னை அழைத்தார்கள், குறுஞ்செய்தி அனுப்பினார்கள், பாராட்டினார்கள். என்னுடைய படம் எங்கோ பாராட்டப்படுவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap