கமலகாசனுக்கு கருநாடாக சங்கீத வித்துவான்கள் கடும் கண்டனம்

சங்கீதத்தில் சிறந்த தியாக ராஜ சுவாமியை ” பிச்சை எடுத்து பாடியதாக கமலகாசன் தெரிவித்த கருத்துக்கு கர்நாடாகாவில் இருந்து கடும் எதுர்ப்பு கிளம்பியுள்ளது.

கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள். அப்போது, எப்படிப்பட படங்களைச் செய்யவேண்டும் என எப்படி முடிவெடுத்தீர்கள் என்கிற கேள்வியை கமலிடம் விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு கமல் பதில் அளித்ததாவது:

சகலகலா வல்லன் படத்தை எல்லோரும் திட்டினார்கள். பாலுமகேந்திரா திட்டினார், நானும் சேர்ந்து திட்டினேன். ஏனெனில் நண்பர்கள் எல்லோரும் இப்படித் திட்டுகிறார்களே என அவமானமாகப் போய்விட்டது. பிறகு யோசித்துப் பார்த்தேன், அந்த வழியை நான் தொடவில்லை என்றால், ராஜ்கமல் நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது.

இது டிக்கெட் போட்டு செய்கிற வியாபாரம் தானே. தர்மத்துக்கு நான் பாடும் பாட்டில்லையே. தியாகய்யர் எப்படி ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதியில் பிச்சையெடுத்துப் பாடினாரோ அப்படிப்பட்ட கலையில்லையே. எனக்கு கார் வாங்க வேண்டுமென்று ஆசை, டிக்கெட் விற்கவேண்டும் என்று ஆசை. எம்.ஜி.ஆர். மாதிரி, சிவாஜி மாதிரி ஆகவேண்டும் என்று ஆசை. பிறகு மக்களை மகிழ்விக்கமாட்டேன் என்று என்ன வீம்பு? அவர்களுக்கு என் கலை புரியவில்லையென்றால் அவர்களை அங்குக் கொண்டுவரவேண்டுமே தவிர, நான் போய் தனியாகக் காட்டில் மகரிஷியாக உட்கார்ந்து கொள்ள முடியாது, அவர்களுடன் சேற்றில் குளித்தும் குளிக்காமலும் இருக்க முடியாது. அவர்களுடைய நண்பனாகவும் ஆசிரியனாகவும் விதூஷகனாகவும் கோமாளியாகவும் எல்லாமுமாக நாம் மாறவேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் தியாகராஜர் பற்றி இழிவாகப் பேசியதாகக் கர்நாடக இசைக் கலைஞர்கள் கமல் ஹாசனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் கமல் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகர் பாலக்காடு ராம்பிரசாத் இணையத்தில் தொடங்கிய ஆன்லைன் பெட்டிஷனில் 11,000 பேர் கையெழுத்திட்டு, தங்கள் கோரிக்கைக்கு இணைய வழி ஆதரவு திரட்டி வருகிறார்கள்1767-ல் திருவாரூரில் பிறந்தவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர். வறுமையில் வாழ்ந்தாலும் எளிமையான வாழ்க்கை, உயா்ந்த நோக்கு, அன்புத் தொண்டு ஆகியவற்றை லட்சியமாகக் கடைப்பிடித்தாா் தியாகராஜ சுவாமிகள். இசையில் புதுப்புது சங்கதிகளை உருவாக்கியவர்.

இசையுலகின் கடவுள்களில் ஒருவராக தியாகராஜர் வணங்கப்படுகிறார். தியாகப்பிரம்மம், தியாகய்யர், தியாகராஜ சுவாமிகள் எனப் போற்றப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் மார்கழியில் தியாகப்பிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனைப் பெருவிழா நடைபெறும். நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், காவிரிக் கரையில் சங்கமித்து அவருடைய பாடல்களைப் பாடி ஆராதனை செய்வார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap