”தளபதிதான் இந்த கேரக்டருக்கு சரி..” அஜித், சூர்யா, ஷாருக்.? – Money Heist இயக்குநர்.

Money Heist வெப் தொடரின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ, பல முக்கியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நெட்ஃப்ளிக்ஸில் மிகப்பெரிய ஹிட் தொடராக கொண்டாடப்படும் வெப் தொடர்தான் Money Heist. அலெக்ஸ் பினா உருவாக்கிய இத்தொடர், கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்தியது. ஸ்பானிஷ் மொழியில் உருவான இத்தொடர் இந்தியா உட்பட உலக அளவில் மெகா ஹிட் அடித்திருக்கிறது. மேலும் இதில் இடம்பெற்ற ப்ரொபஸர் கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் இத்தொடரின் இயக்குநரான அலெக்ஸ் ரோட்ரிகோவுடன் வீடியோ கால் மூலம் பேசினோம், அப்போது அவர் தொடர் குறித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்திய திரை நட்சத்திரங்களில் யார் எந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கேட்டதற்கு, ப்ரொபஸர் கதாபாத்திரத்துக்கு விஜய் சரியாக இருப்பார் என தெரிவித்தார். மேலும் பெர்லின் கதாபாத்திரம் ஷாருக் கானுக்கும், பொகோட்டா கதாபாத்திரம் அஜித்துக்கும், போலீஸாக வரும் சுவாரஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கும் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap