நடிகர் சிம்பு ரசிகருக்கு கொரோனா…. உடனடியாக நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வைரலாகும் செய்தி…!

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட STR நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் C.N.சிம்புஆனந்தன் என்பவருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரமாக சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக மற்ற நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

உடல்நலம், சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்த அவர் தன்னம்பிக்கை, மனதைரியத்துடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். மேலும் சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். எப்போதுமே தனது ரசிகர்களின் மேல் அதீத பாசம் கொண்டவர் STR என்பது பலரும் அறிந்த விஷயம். அது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap