நவீன் 8ம் ஆண்டு படிக்கும் போது வரைந்த ஓவியம்.

மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் சிறந்த வசனங்கள் எழுதியதற்காக இவருக்கு விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுத்த நவீன், மீண்டும் சமுத்திரக்கனி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அதன் பிறகு அலாவுதீனின் அற்புத கெமரா, மற்றும் அக்கினி சிறகுகள் போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவர காத்துள்ளன

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களது வீடுகளில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் நவீனும் தன்னுடைய பழைய கால நினைவுகளை மக்களோடு பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது தீட்டிய பென்சில் ஓவியம். அப்போது எங்களை வசீகரித்திருந்த ஒரு தேவதையின் கண்கள். உங்களுக்கும் அதே தேவதைதான் தெரிகிறாரா..?” என்று வினைவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap