மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்குமா? நடிகை ரகுல் ப்ரித்திசிங் கேள்வி!

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு டாஸ்மார்க் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்தது குறித்தும், மது வாங்க வரிசையில் நிற்பவர்கள் குறித்தும் மதுவால் ஏற்பட்ட விபரீதங்கள் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’’தேவ்’, சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ராகுல் பிரீத்சிங் கையில் சில பாட்டில்களுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘இந்த ஊரடங்கு நேரத்தில் ரகுல் ப்ரித்திசிங் ஆல்கஹால் வாங்கி செல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த வீடியோவிற்கு பதில் கூறிய நடிகை ரகுல் ப்ரித்திசிங் தான் மெடிக்கல் கடையில் அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே வாங்கியதாகவும் மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்பார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்

இந்த நிலையில் ரகுல் ப்ரித்திசிங் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ரகுல் ப்ரித்திசிங் மெடிக்கல் கடையில் தான் பொருட்களை வாங்கி செல்கிறார் என்றும் அப்படியே அவர் ஆல்கஹால் வாங்கினாலும் அதில் தவறு இல்லை என்றும் அவருடைய பணத்தை அவர் இஷ்டப்படி செலவழிக்க உரிமை உண்டு என்றும் கருத்து கூறி வருகின்றனர் இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap