விஜய் சேதுபதி வெளியிட்டு வைத்துள்ளார்.

ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவரின் கடின உளைப்பால் தன்னை ஒரு முன்னணி நடிகையாக உயர்த்திக்கொண்டவர். இவரின் அடுத்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அவருடைய நடிப்பில் வெளியான காக்க முட்டை, மற்றும் வடசென்னை ஆகிய படங்கள் தொடங்கி தற்போது வெளியாகி இருக்கும் நம்ம வீடு பிள்ளை, வானம் கொட்டட்டும் மற்றும் ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ வரை அனைத்து படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது. 

2017-ம் ஆண்டு முதல் பிற மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

‘டக் ஜெகதீஷ்’ என்ற தெலுங்கு படம், துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை மற்றும் இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பி வெளியாகியுள்ளது. அவரது அடுத்த படம் ‘திட்டம் இரண்டு’ ஆகும். இப்படத்தை கார்த்திக் இயக்க, மினி ஸூடியோ மற்றும் சிக்ஸர் எண்டர்டெயின்மண்ட் இணைந்து தயாரிக்கிறது. மிஸ்ட்ரி த்ரில்லராக உருவகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி, ஊசி, மருந்து, கைரேகை, தரவுகள், இரத்தக்கறை, பூதக்கண்ணாடி, மொபைல் ஃபோன், லேப்டாப், புகைப்படங்கள் என பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த போஸ்டர், தற்போது செம வைரலாகிவருகிறது. இப்படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap