விஜய் ஆண்டனி சார் தனது சம்பளத்திலிருந்து 25% குறைத்ததை அடுத்து ஹரிஷ் கல்யானும் தனது சம்பளத்தை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
இதற்காக அவருக்கு வாழ்த்துகள். இதைச் செய்வது மிகப் பெரிய விஷயம். நானும் இதைத் தொடரவுள்ளேன் என்று கூறியுள்ளார்.கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா பெருந்தொற்று தென்னிந்தியத் திரையுலகத்தையும் பெரிதாகப் பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், அவர் நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடையவுள்ளார்கள்.