மக்கள் நீதி மையம் மட்டமல்ல நாம் தமிழர் கட்சி , மற்றும் சமுக ஆர்வலர்கள் என எல்லோரும் கொரொணா காலத்தில் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்துவிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியும் நீதி மன்றத்தை நாடியுமுள்ளனர். அதில் மக்கள் நீதி மையம் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , தமிழகத்தில் தற்போது நிலவும் ஊரடங்கு முடியும் வரையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து நடிகை கஸ்தூரி அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி மக்கள் நீதி மய்யத்தையும், அக்கட்சி தலைவர் கமல்ஹாசனையும் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
“மக்கள் நீதி மய்யம் முயற்சியால் இன்று மக்களின் குரல் நீதிமன்றத்தில் கேட்டது. மக்களின் குரலை நீதிமன்றம் கேட்டது! தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி. தாய்மாருக்கு வெற்றி. சட்டபூர்வமாக சாதித்த மய்யத்தினருக்கு மனப்பூர்வமான நன்றி!”, என்று குறிப்பிட்டுள்ளார்.