சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாகும் அரவிந்தசாமி?

ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி, மோகன் ராஜா மீண்டும் இணைந்து ’தனி ஒருவன் 2’ படத்தை உருவாக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தனி ஒருவன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தில் நடித்த நடித்த அரவிந்த்சாமியின் வில்லன் நடிப்பு ஒரு முக்கிய காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

இந்த நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்தசாமியின் நடிப்பை பார்த்து வியந்து போன ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் தனது அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 21 வது படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியுடன் இயக்குனர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை நோக்கி செல்லும் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் மற்றும் அரவிந்தசாமி மோதுவது உறுதியானால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் சயின்டிஃபிக் த்ரில்லர் திரைப்படம் என்பதும், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிப்பார் என்று என்பது குறிப்பிடத்தக்கது

Share via
Copy link
Powered by Social Snap