நெஞ்சை பதற வைத்த சம்பவம்! கவலையில் மூழ்கிய நடிகர், நடிகைகள் – சோகத்துடன் வெளியிட்ட பதிவு

உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. மேலும் 2.70 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். உலக நாட்டு மக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலர் இதனால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்கள். பலரும் இந்நோய் தொற்றால் வேலையை இழந்து வறுமையில் வாடுவோருக்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் உதவி வருகிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் விசாகபட்டினத்தில் தொழிற்சாலையிலிருந்து விசவாயு கசிந்து வெளியேறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரகுல் விஷ வாயு விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் ஆறுதல் தெரிவிக்கிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். எனது விசாக் மக்களே பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதே போல நடிகர் மகேஷ் பாபு , ஜெயம் ரவி, நடிகை தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரும் பதிவிட்டுள்ளார்கள்.

Share via
Copy link
Powered by Social Snap