மருத்துவ மாதுக்கள் மூவர் படுகொலை

மெக்சிக்கோ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 சகோதரிகள் கோஹீய்லா என்ற எல்லை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதுமே செயல் வீரர்களாக திகழ்ந்து வரும் மருத்துவப்பணியாளர்கள் பாராட்டப்பட்டுவரும் அதேநேரம் அவர்கள் மீது தாக்குதல்களும் ஆங்காங்கே நடப்பது கவலை தருவதாக உள்ளது.

கொல்லப்பட்ட 3 சகோதரிகளில் இருவர் தாதியர்கள் ஒருவர் மருத்துவமனை நிர்வாகி. ஆனால் இவர்கள் பணி காரணமாகத்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை.

டோரியான் நகரில் இவர்கள் 3 பேரும் கொல்லப்பட்டு கிடந்ததாக மெக்சிகன் சோசியல் செக்யூரிட்டி கழகம் தெரிவித்துள்ளது.

மெக்சிக்கோவின் மற்ற பகுதிகளில் சுகாதாரப்பணியாளர்களே கொரோனா வைரஸை பரப்புபவர்கள் என்று நினைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap