
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இணையதளங்களில் மிக அதிகமான பார்வையாளர்களை பெற்று இந்த பாடல் சாதனை புரிந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர் ’வாத்தி கம்மிங்’ பாடலை கம்போஸ் செய்த காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில் ’மிக பிரமாதமாக கம்போஸ் செய்யும் திறமை உள்ள ஒருவரால் தான் இதை செய்யமுடியும். கடவுளின் ஆசீர்வாதம் அந்த சகோதரருக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். அனிருத்தின் இந்த வீடியோ சமூக வலைதள பயனாளர்களால் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.