6 வாரமான குழந்தை கொரோணாவால் உயிரிழப்பு. 626 ஒரே நாளில் பிர்த்தானியாவில் உயிரிழப்பு.

கொரோணாவால் இன்றும் 626 பேர் பிரித்தானியாவில் பலியாகியுள்ளனர். , பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்னிக்கை குறைந்து வருவதாக கூறும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான நிர்வாகம், எதிர்வரும் திங்களன்று முதல் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 332 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து ஸ்கொட்லாந்து (49), வேல்ஸ் (28), வடக்கு அயர்லாந்து (5) என பதிவாகியுள்ளது. இதில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் குழந்தை தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிட என்.எச்.எஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனிடையே பிரித்தானியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து பலி எண்னிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில், இந்த வாரம் பிரித்தானியா இத்தாலியை மிஞ்சியதாக தெரியவந்துள்ளது. அதன்படி, பிரித்தானியா தற்போது ஐரோப்பாவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap