அசுரனுக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்தடுத்த விஷ் லிஸ்ட் இவைதான்!

அசுரன் பட வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் க்ராஃப் மேலும் உயரத்துக்குப் போனது. அடுத்து அவர் யாரை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதி எழுந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக திரைத்துறை முடங்கிப் போனது.

ஒரு பக்கம் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி வட சென்னை 2 -வில் தொடரவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் எடுக்க நிறைய கால அவகாசம் தேவை, அதனை ஒரு வெப் தொடராக எடுக்கலாம் என்றும் வெற்றிமாறன் திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அதனை அடுத்து எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் புகழ் பெற்ற வாடிவாசல் நாவலை திரையாக்கம் செய்யவிருக்கிறார் வெற்றிமாறன் என்ற தகவலும் வெளியானது. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவலை அடுத்து வெற்றிமாறன் முதலில் எந்த படத்தை தொடங்கவிருக்கிறார் என்பதை ஆவலுடன் அனைவரும் எதிர்நோக்கியிருந்தனர்.

இது குறித்து வெற்றிமாறன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது, ‘வடசென்னை 2-வை வெப்தொடராக எடுக்கலாம் என்று யோசித்து வருகிறேன். ஆனால் இறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை. ஊரடங்கு உத்தரவுக்கு முன் சூரியை வைத்து ஒரு படத்தை தொடங்கியிருந்தேன். இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அடுத்து சூரியாவுடன் இணையும் வாடிவாசல் படத்தின் திரைக்கதையை முடித்துவிட்டேன். அருவா படத்தை முடித்ததும் சூரியாவின் தேதிகள் கிடைக்கும். அதன்பிறகு ஷூட்டிங் தொடங்கும்’ என்றார்.

சூரியின் படம் நகைச்சுவை கலந்த Black Comedy கதை எனவும் இந்தப் படத்தில் சூரியின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்கிறது வெற்றிமாறன் வட்டாரம்.

Share via
Copy link
Powered by Social Snap