அட, நம்ம ரம்பாவின் மகளா இது! அழகான க்யூட் குழந்தைகளுடன் ரம்பாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!

கொரோனா அச்சுறுத்தலால் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில், அனைத்து துறைகளும் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் திரைத்துறையும் பெரும் ஆட்டம் கண்டுள்ளது. திரைப்படம் மற்றும் சின்னத் திரை படப்பிடிப்புகளின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழ அரசு அளித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

பயணங்கள், மற்றும் சோஷியலைசிங் உள்ளிட்ட விஷயங்கள் குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு டிவி மற்றும் இண்டெர்நெட் என்றாகிவிட்டது. தங்கள் மனம் கவர்ந்த நாயக நாயகிகளின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவர்கள் பகிர்ந்து கொள்ள அதற்கு பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அண்மையில் 90-களில் பிரபலமான நடிகையான ரம்பா, தனது குழந்தைகளின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ரம்பாவின் அறிமுகப் படமான உள்ளத்தை அள்ளித்தா ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் உள்ளத்தையும் அள்ளிச் சென்றது எனலாம். நடிப்பு மட்டுமல்லாமல் நடனமும் ரம்பாவுக்கு ப்ளஸ்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை 2010-ம் ஆண்டு திருப்பதியில் கரம் பிடித்தார் ரம்பா. அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகிவிட்டார். இந்த தம்பதியருக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு அழகான பெண் குழந்தைகள் உள்ளனர். இடைப்பட்ட காலத்தில் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, சில காலம் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் விவாகரத்து பெற முயன்று போது, கவுன்சிலிங்கில் இருவருக்கும் உள்ள பிரச்னைகள் சுமுகமாகி மீண்டும் இணைந்து வாழ்ந்தனர்.

அதன்பின் 2018-ம் ஆண்டு ரம்பா இந்திரன் தம்பதியருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் ரம்பா அண்மையில் குழந்தைகள் மற்றும் கணவருடனான படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் அனைவரும் பத்திரமாக இருங்கள் என்ற கருத்தையும் அவர் பதிவிடத் தவறுவதில்லை.

Share via
Copy link
Powered by Social Snap