அரசுக்கு நடிகர் ரஜினி பளீச் எச்சரிக்கை..! – ”டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால்..”

டாஸ்மாக் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பளீச் கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஊரடங்கு போடப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனிடையே சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து டாஸ்மாக் கடைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டாஸ்மாக் விவகாரத்தில் தனது கருத்தை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ”இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவையடுத்து ரஜினிகாந்த் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கியுள்ளார். பிரபலங்கள் பலரும் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap