உலக நாடுகளில் ஏற்படப்போகும் பிரச்சினைகள்

26 கோடி பேர் கொரோணா பிரச்சினை தீருமிடத்து பெரும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க போகின்றார்கள் என ஐனா தெரித்திருக்கிறது.

கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இந்த ஆண்டு இறுதியில் இதன் நிலைமை மோசமாகும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் David Beasley தெரிவித்துள்ளார். முதலில் அதை தடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதை சரி செய்வதற்கு பணக்கார நாடுகளும் பண வசதி கொண்ட நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும்.

விநியோக சங்கிலி அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பின் தலைவர் மார்க் லோகாக் இதுபற்றி தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றின் உச்சம் இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்கலாம். அப்போது ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகும். ஏற்கனவே கொரோனாவால் மக்களுக்கு வருமானம் இல்லை. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. உற்பத்தியும் இல்லை. ஏற்றுமதி வருவாய், பணம் அனுப்புதல், சுற்றுலா ஆகியவை முடங்கிவிட்டன.சுகாதார அமைப்புகளும் அழுத்தத்தில் இருக்கின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளால் மக்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று உலக உணவு திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.

பசி பஞ்சம் வறுமை நோய் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். வீதி போக்குவரத்து தடைகளால் பொருளாதார மந்த நிலை இன்னும் மோசமாகும். இது உலக அளவில் விநியோக சங்கிலியை முறித்துவிடும். பசி பட்டினி போன்றவற்றால் மக்களிடையே மோதல் ஏற்பட்டு அது கொந்தளிப்புகளையும் உருவாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் செல்லலாம் என்றும் உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap