எங்கள் வீட்டின் எல்லா நாளும் கார்த்திகை…. கேப்டன் தோனிக்கு கேப்டன் விஜயகாந்த் பாட்டு!

ஊரடங்கின் காரணமாக வழக்கமாக நடைபெறும் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. கொரோனா வைரஸினால் மக்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரையரங்குகள் செயல்படாதது, ஐபிஎல் போட்டிகள் நடைபெறாதது என பொழுதுபோக்கு அம்சங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியா நடைபெற்றும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறவில்லை. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். இருப்பினும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதாமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அவ்வப்போது தோனி, ரெய்னாவின் அன்றாட செயல்பாடுகள் குறித்து வீடியோவை வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தோனி, ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் சிஎஸ்கேவின் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பைக் கண்டு உணர்ச்சி வசப்படுகின்றனர். அப்போது ரெய்னாவை கட்டியணைக்கும் தோனி, என்ன தாடியெல்லாம் வெள்ளையாயிடுச்சு என்று கலாய்க்கிறார். இந்த வீடியோவின் பின்னணியில் கேப்டன் விஜயகாந்த்தின் வானத்தைப் போல பட பாடலான எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ஒலிக்கிறது.

Share via
Copy link
Powered by Social Snap