
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை பாராட்டாதவர்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா, நயன்தாரா குறித்து கூறிய ஒரு கமெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் அதர்வா அளித்த பேட்டியின் போது ’உங்களை கவர்ந்த நடிகர், நடிகை யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ’தன்னை கவர்ந்த நடிகர் விஜய்சேதுபதி என்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை அவர் ஏற்று வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் கூறினார். அதேபோல் நடிகைகளீல் பிடித்தவர் நயன்தாரா என்றும் அவர் மிகுந்த தன்னம்பிக்கை உள்ள ஒரு பெண் என்றும் அவர் கூறியுள்ளார். அதர்வாவின் இந்த பதிலுக்கு விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாரிசு நடிகராக இருப்பதில் சில சௌகரியங்கள் மற்றும் சில அசெளகரியங்கள் இருப்பதாக கூறிய அதர்வா, இன்னாரின் மகன் என்பதால் மிக எளிதில் ரசிகர்களைச் சென்றடையலாம் என்றும் ஆனால் அப்பாவின் நடிப்போடு தன்னுடைய நடிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது அசெளகரிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அப்பா ஒரு காதல் ஹீரோ என்பது போல் தனக்கும் காதல் கதைகள் பிடிக்கும் என்றும் ஆனால் விளையாட்டு சம்பந்தப்பட்ட காதல் கதை ரொம்ப பிடிக்கும் என கூறினார். ஈட்டி திரைப்படம் அப்படி ஒரு படமாக அமைந்தது என்றும் அந்த படம் தனக்கும் தனது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படம் என்றும் கூறினார். மேலும் வரலாற்று சம்பந்தப்பட்ட படத்தில் குறிப்பாக போர் சம்மந்தப்பட்ட படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அதர்வா அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.