விடுகதையா இந்த வாழ்க்கை ?! – ரசிகரின் கேள்விக்கு ரஜினிகாந்த் ஸ்டைலில் பதிலளித்த அஸ்வின்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அச்சுறுத்தி வரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் எந்த வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இதனையிடையே ஐபிஎல் போட்டிகள் குறித்து ரசிகர்களிடையே எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் ஐபிஎல் சம்பந்தமான பதிவுகள் வைரலாகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்களும் பல்வேறு பதிவுகள் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்பொழுது சென்னை சூப்பர் கிங்க்ஸ்காக விளையாடுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அஸ்வின், விடுகதையா இந்த வாழ்க்கை என்று பதிலளித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap