25 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராகும் சுஹாசினி!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி கடந்த 1995ஆம் ஆண்டு ’இந்திரா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே. அரவிந்த்சாமி, அனுஹாசன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இயக்குனர் துறையில் காலடி வைத்துள்ளார். ஆனால் இம்முறை அவர் திரைப்படம் இயக்கவில்லை என்பதும் குறும்படம் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’சின்னஞ்சிறு கிளியே’ என்ற டைட்டிலில் இந்த குறும்படத்தை சுஹாசினி உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த குறும்படத்தில் அஹானா கிருஷ்ணா, சுகாசினி மணிரத்தினம், கோமளம் சாருஹாசன், மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நடித்து உள்ளதாகவும் இந்த குறும்படம் முழுவதுமே தனது ஐபோனில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறும்படத்திற்காக லைட்டிங் உள்பட எந்த வித டெக்னீசியனும் பணியாற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த குறும்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளதாகவும் கெவின் தாஸ் படத்தொகுப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20 நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த குறும்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தற்போது அமலில் உள்ள லாக்டவுன் குறித்த கதையம்சம் கொண்டது தான் இந்த குறும்படம் அவர் கூறியுள்ளார் .

Share via
Copy link
Powered by Social Snap