அப்பாவுடன் சேர்ந்து இலங்கை அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய அபி சரவணன்!

இளம் நடிகர் அபிசரவணனின் முகம் பலருக்கும் பரிட்சயமான ஒன்றே. சமீபகாலமாக அவர் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். மதுரையில் தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் அவர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி பொருட்களை வழங்கி வருகிறார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

பலருக்கும் அவரின் இந்த முயற்சிக்கு நன்கொடை அளித்துவருகிறார்கள். கூட்டு முயற்சியால் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் அவர் மதுரையில் வாழும் இலங்கை அகதிகள் முகாம் மக்களுக்கு இரண்டாம் முறையாக நிறைய உதவி வழங்கியுள்ளார்.

வாழ்த்துக்கள் அபி, உங்கள் சேவை தொடரட்டும்.

Share via
Copy link
Powered by Social Snap