நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் கடந்த ஐந்து வருடங்களாக வேரூன்றிய நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்

அந்த புகைப்படத்தில் நயன்தாரா ஒரு சிறு குழந்தையை கையில் வைத்து உள்ளவாறு உள்ளது. இந்த புகைப்படம் குறித்து கருத்து கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன், எனது வருங்கால குழந்தையின் அன்னையான நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதல் 100% சதவீதம் உறுதி செய்யப்பட்டதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் உறுதி என்றும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த அன்னையர் தினத்தில் நயன்தாரா தனது குழந்தையுடன் அன்னையர் தினத்தை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share via
Copy link
Powered by Social Snap