நேர்கொண்ட பார்வை படத்திற்கே அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா! வேற லெவல்

தல என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வாரம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

அந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நேர்கொண்ட பார்வை பெரிய கம்ர்ஷியல் விஷயங்கள் இல்லாத படம்.

அப்படியிருக்க அந்த படத்திற்கே அஜித் வாங்கிய சம்பளம் ரூ 50 கோடி என பிரபல தயாரிப்பாளர், நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

அப்படியென்றால் வலிமை படத்திற்கு எப்படியும் அஜித்தின் சம்பளம் இதை விட அதிகமாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

அதே நேரத்தில் கொரொனாவால் திரையுலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால், பல நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap