பேய்ப்பட போட்டியில் ஜெயித்தால்… என்னோடு பேசலாம் – ஷாருக்கான் அறிவிப்பு!

இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனா ஊரடங்கினால் தவிக்கும் மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகிறார். இணையதள இசை நிகழ்ச்சியில் பங்கேற்றும் நிதி திரட்டினார். இந்த நிலையில் இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்கிறோம். நமக்கு நேரம் கிடைத்துள்ளது. நிறைய பேய்ப்படங்கள் பார்த்து இருப்போம். இந்த நேரத்தில் நம்மால் வேடிக்கையாக பயமுறுத்தும் வகையில், ஒரு உள்ளரங்கு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் பேய்ப்பட போட்டியை அறிவிக்கிறேன்.

Share via
Copy link
Powered by Social Snap